நாளிதழ் விநியோகத்திற்கு தடையில்லை

சென்னை: ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், நாளிதழ்கள் விநியோகத்திற்கு எவ்வித தடையும் இல்லை என சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

சென்னை மாநகராட்சி சார்பில் டுரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி துவங்கியது. இப்பணிகளை, ரிப்பன் அலுவலகத்தில் தொடங்கி வைத்த பின்னர் சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியதாவது: நாளிதழ்களை விநியோகத்திற்கு எந்தவித தடையும் இல்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
டுரோன் மூலம், கிரிமி நாசினி தெளிப்பது, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை டாக்டர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பது, ரயில் நிலையம், விமான நிலையங்களில் சிக்கி தவித்தவர்களை 20 முகாம்களில் தங்க வைத்து அவர்களை கண்காணித்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.22 ஆயிரம் இல்லங்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளன.