திருவனந்தபுரம்: கேரளாவில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாமல், வெளியில் நடமாடிய 2,531 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்படுமென பிரதமர் மோடி அறிவித்தார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம்(மார்ச் 24) நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர்த்து வெளியில் வர வேண்டாமென போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.
ஆனால் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் , சாலைகளில் உலா வந்த 1,636 பைக்குகளை பறிமுதல் செய்ததோடு, 2,531 பேரையும் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் வாகன பதிவை ரத்து செய்வதுடன், அடுத்த முறை சிக்கினால் பாஸ்போர்ட் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரித்துள்ளனர்.
ஊரடங்கின் போது சாலையில் நடமாடிய 2,531 பேர் கைது