புதுடில்லி : கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 'ககன்யான்' திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு பயிற்சியை ரஷ்யா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்யும் 'ககன்யான்' திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இத்திட்டத்தின் கீழ் இந்திய வீரர்களுக்கு பயிற்சியளிக்க ரஷ்ய நிறுவனத்துடன் 'இஸ்ரோ' ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்படி டிச. 2021ல் 'ககன்யான்' திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு பயிற்சியை ரஷ்யா நிறுத்தி வைத்துள்ளது. ரஷ்யாவிலும் கொரோனா பாதிப்பு உள்ளதையடுத்து விண்வெளி வீரர்களுக்கான பயிற்சியை ரஷ்யா நிறுத்தியுள்ளதாக ஏ.என்.ஐ. , டுவிட்டரில் செய்தி வெளியிட்டுளளது.